இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இரும்புத்திரை வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். தற்போது அவர் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மதுரையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு அவர் தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதனையும் விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் டெம்பர். இதில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ், கோவை சரளா, தணிகல பரணி உள்பட பலர் நடித்திருந்தார்கள். மணிசர்மா இசை அமைத்திருந்தார், அனூப் ரூபன் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார், பூரி ஜெகன்னாத் இயக்கி இருந்தார். சாமி படத்தின் சாயல் கொண்ட கதை. ஒரு கெட்ட போலீஸ், காதலிக்காக நல்ல போலீசாகும் கதை.