'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இதில் தனியரு மனிதராக சமுதாயத்துக்காக போராடி வரும் டிராஃபிக் ராமசாமி கேரக்டரில் எஸ்.ஏ.சந்திர சேகர் நடித்திருகிறார். அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், பிரகாஷ்ராஜ், குஷ்பு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் நடிப்பதாக இருந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துக் கொடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனியாகவே நடித்திருக்கிறார். குஷ்பு அரசியல்வாதியாகவும், அம்பிகா நீதிபதியாகவும் நடித்துள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விக்கி இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி 3 தேதிகள் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது. அதில் ஜுன் 22ந் தேதியை தேர்வு செய்து அதில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. ஜூன் 22ந் தேதி விஜய் பிறந்த நாள். மகன் பிறந்த நாளில் அப்பா நடித்த படம் வெளிவருகிறது.