டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராம்கோபால்வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்துள்ள ஆக்சன் படம் ஆபீசர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இப்படம் ஜூன் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து நானியுடன் இணைந்து ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார் நாகார்ஜூனா. அங்கு ஐரோப்பாவிலுள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டுப்ராவ்னிக் என்ற நகரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள ஒரு பழைய வீட்டிற்குள் தான் நிற்கும் புகைப்படமொன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜூனா.