ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட் படமான 'டெட்பூல் 2' படம் இந்தியா முழுவதும் நேற்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. முதல் நாளில் சுமார் 11 கோடி ரூபாய் வரை இப்படம் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையில் இந்தப் படம் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 31 கோடி, 'பாகி 2' - 25 கோடி, 'பத்மாவத்' - 19 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளன.
வியாழக்கிழமை நடைபெற்ற பிரிவியூ காட்சிகளுடன் சேர்த்து அமெரிக்காவில் மட்டும் முதல் நாளில் சுமார் 50 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்றும் நாளையும் சேர்த்து இந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 130 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 130 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமெரிக்காவில் சுமார் 4300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படத்திற்குப் பிறகு இந்தப் படமும் உலக அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.