'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா மற்றும் பலர் நடிப்பில், நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' அமெரிக்காவில் வசூலில் நல்ல சாதனை படைத்து வருகிறது.
அமெரிக்காவில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே அதிக வசூலைப் பெறுவது வழக்கம். ஆனால், முதல் முறையாக வளரும் நடிகை நடித்த படம் ஒன்று 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்ற படங்களாக 'ரங்கஸ்தலம்' - 3.5 மில்லியன், 'பரத் அனி நேனு' - 3.5 மில்லியன், 'அஞ்ஞாதவாசி' - 2 மில்லியன் வசூலைக் கடந்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது 'மகாநதி' படமும் 2 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இன்னமும் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் நாளையும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார வசூலாக 'மகாநதி' படம் உலகம் முழுவதும் 48 கோடி வரை வசூலித்துள்ளது.