தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பிருத்விராஜை பொறுத்தவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் நான்கு படங்களையாவது கொடுத்து விடுவார். கடந்த டிசம்பரில் அவரது 'விமானம்' படம் வெளியானபின் இந்த ஐந்து மாதங்களில் அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் வரும் ஜூன்-15 முதல் ஜூலை-6 ஆம் தேதிக்குள்ளாக அவரது 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.
இதில் ரோஷினி தினகர் டைரக்சனில் பிருத்விராஜ் - பார்வதி இணைந்து நடித்துள்ள 'மை ஸ்டோரி' வரும் ஜூன்-15ல் ரிலீஸாக இருக்கிறது. அதை தொடர்ந்து முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட 'ரணம்' படம் ஜூன்-28லும், அஞ்சலி மேனன் டைரக்சனில் பிருத்விராஜ் - பார்வதி - நஸ்ரியா இணைந்து நடித்துள்ள படம் வரும் ஜூலை-6ஆம் தேதியும் ரிலீஸாக இருக்கின்றன.
இப்படி ரிலீஸாவதில் பிருத்விராஜுக்கே உடன்பாடு இல்லையாம்.. ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பஞ்சாயத்துகளுக்கிடையே உருவாக்கப்பட்ட இந்தப்படங்கள், தயாரிப்பாளர்களின் பிடிவாதம் காரணமாக தவிர்க்க முடியாதபடி ஒரே சமயத்தில் ரிலீஸாக வேண்டிய சூழல் உருவாகி விட்டதாம். இதில் யாரேனும் ஒருவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.