ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெரிய இயக்குநர்களை தேடிப்போய் தன்னை வைத்து படம் எடுக்கும்படி கோரிக்கை வைக்கும் ஹீரோக்கள் மத்தியில் திறமையான இளம் இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதர்வா.
அதர்வா நடித்த 'செம போத ஆகாதே' வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து 'ருக்குமணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்', 'ஒத்தைக்கு ஒத்தை', 'பூமராங்' ஆகிய படங்களும் அதர்வாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
இந்தப்படங்களை அடுத்து, '8 தோட்டாக்கள்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா. இந்நிலையில் 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அதர்வா.
'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன', 'காதல் கசக்குதய்யா', 'ராஜா மந்திரி' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த 'எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.