ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நேற்று முன்தினம் பாஸ்கர் தி ராஸ்கல் படம் வெளிவந்தது. நேற்று காளி, செயல், 18.05.2009 படங்கள் வெளிவந்தது. இவற்றுக்கு ஊடாக வெளிவந்தது டெட்பூல் 2 என்கிற ஹாலிவுட் படம்.
ஏற்கெனவே வெளிவந்த அவென்ஞ்சர்ஸ் இன்பினிடி வார் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் டெட்பூல் வெளிவந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்காரர்கள், தமிழ் படங்களை விட இந்த மாதிரியான ஹாலிவுட் படங்களை திரையிட அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
காரணம் வரி விஷயத்தில் தமிழ் படத்திற்கும், ஹாலிவுட் படத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. அதோடு கொடுக்கிற டிக்கெட் காசுக்கு ஹாலிவுட் படங்கள் தான் வொர்த் என்றும் கருதுகிறார்கள். இதனால் தமிழ் படங்களுக்கு வேண்டா வெறுப்பாகவே தியேட்டர் கொடுக்கிறார்கள்.
நேற்று வெளியான படங்களில் காளி படம் தவிர மற்ற படங்களுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லை. பாஸ்கர் ஒரு ராஸ்கல் திட்டமிட்ட எண்ணிக்கையில் வெளியாகவில்லை. செயல் என்ற படத்திற்கு ஒரு சில தியேட்டர்களே கிடைத்தது.
"எங்களுக்கு எந்தப் படம் லாபம் தருகிறதோ அந்தப் படத்தைதான் நாங்கள் திரையிடுவோம்" என்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இன்னும் சில வாரங்களில் ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.