ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமான 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற படத்தை இயக்கினார். எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் சரியாக ஓடவில்லை.
எனவே தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்த சாம் ஆண்டன், தற்போது தனது மூன்றாவது படமாக, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஹன்சிகா தற்போது நடிக்கும் ஒரே புதிய படம் இதுதான். அதர்வா, ஹன்சிகா முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் இது!
'எரும சாணி' புகழ் ஹரிஜாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 'யோகி' பாபு காமெடியனாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் அதர்வா போலீஸ்காரராக நடிக்கிறார். அவசர போலீஸுக்கும் 100 என்ற எண்ணுக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்திற்கு '100' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.