டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த சக்கப்போடுபோடு ராஜா படு தோல்வியடைந்தது. அதனால் அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா முக்கிய பாத்திரங்களில் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்தின் பிசினஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே பலதடவை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் 'சர்வர் சுந்தரம்' ரிலீசாகவில்லை. இப்போது 'சர்வர் சுந்தரம்' படத்தை ஜூலை மாதம் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சந்தானம் கதாநாயகனாக நடித்த, பல படங்கள் சொல்லும்பாடியான படமாக அமையவில்லை. நாகேஷ் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படத்தின் தலைப்பை மீண்டும் வைத்து உருவாகியுள்ள இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தை சந்தானம் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
இந்தப் படத்தின் வெற்றியில் தான் சந்தானத்தில் எதிர்காலமே உள்ளது! ஒருவேளை இந்தப்படம் சரியாக ஓடவில்லை என்றால் அவர் மீண்டும் காமெடியனாக நடித்தாலும் ஆச்சர்யமில்லை.