அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், அப்படத்தின் நாயகி, நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும், அவ்வப்போது வெளிநாடு செல்வதும், ஒரே வீட்டில், இருவரும் சேர்ந்து வசிப்பதுமாக, நாட்களை கடத்தி வந்தனர். இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், தகவல் பரவியது.
இந்நிலையில், நயன்தாரா நடித்த, கோலமாவு கோகிலா படத்தில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய, 'எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி...' பாடல், சமீபத்தில் வெளியானது. அவ்வரிகளை மேற்கோள் காட்டி, நயன்தாராவுக்கு, வெய்ட் பண்ணவா...' என, விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பி, நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை, தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.