மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை சன்னி லியோன், தமிழில் ஹீரோயினாக நடிக்கும் முதல்படம் வீரமாதேவி. "தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு" படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். பொன் ஸ்டீபன் தயாரிக்கிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. போர்க்களத்தின் பின்னணியில் வெள்ளை குதிரையில் கம்பீரமாக போர் புரிய காத்திருக்கும் வீரமாதேவியாக சன்னி லியோன் உள்ளார்.
தமிழ்நாட்டு வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வீரப் பெண்ணின் கதை இது. வீரப் பெண்ணாக சன்னி லியோன் நடிக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகிறது. இதில், ரூ.40 கோடி கிராபிக்ஸ்க்காக மட்டும் செலிவிட இருப்பதாக கூறுகிறார் இயக்குநர் வடிவுடையான்.