ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ரஜினிகாந்த் ஒரு பக்கம் சினிமாவிலும், மற்றொரு பக்கம் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமனத்தை முடித்து, அவர்களை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். அடுத்தப்படியாக மகளிரணியினரை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த சாந்தா என்ற 78 வயது பெண், ரஜினியின் தீவிர ரசிகையாக உள்ளார். ரஜினியின் அரசியல் அறவிப்பு வெளியானதும் அவரும் களத்தில் இறங்கி உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டினார்.
சாந்தாவின் ஒரே ஆசை ரஜினியை சந்தித்து தன் பணிகளை சொல்ல வேண்டும் என்பது தான். இந்த தகவல் ரஜினியின் காதுக்கு எட்ட, தனது போயஸ் இல்லத்திற்கு சாந்தாவை வர வைத்தார் ரஜினி. அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.