மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அறிமுகமானவர் குஜராத் நடிகை நமீதா. அதன்பிறகு பல வருடங்களாக முன்னணி கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்த அவருக்கு சமீப காலமாக சரியான படங்கள் இல்லை. என்றபோதும் சென்னையிலேயே செட்டிலாகி விட்ட அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறி வரும் நமீதா, சினிமா ஆடியோ விழாக்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில், வீராச்சாமி படத்திற்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து டி.ராஜேந்தர் இயக்கி நடிக்கும் ஒரு படத்தில், முக்கிய வேடத்தில் நமீதா நடிக்கயிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.
பெரும்பாலும் அண்ணன் தங்கச்சி கதைகளில் படங்கள் இயக்கி வந்துள்ள டி.ஆர்., இந்த படத்தை அரசியல் நய்யாண்டி கதையில் இயக்குகிறாராம். இப்படத்தில் ராதாரவி உள்பட வேறு சில முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.