Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் 2-வில் பங்கேற்பது யார்? யார்?

18 மே, 2018 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Who-are-all-the-Participants-in-Bigboss-2?

விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் தொகுத்து வழங்குகிறார்.

ஆனால் கலந்து கொள்ளப் போகிறவர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல விளம்பரமும், ரசிகர்களும் கிடைப்பதால் அதில் கலந்து கொள்ள நடிகர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

சேனல் வட்டாரத்தில் கசிந்த தகவல்களின் படி நடிகைகள் இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது. இவர்களுடன் சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

நடிகர்களில் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் பொதுவான நபர்களாக எழுத்தாளர் சாரு நிவேதிதா, அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாவது சீசனில் நன்கு பிரபலமானவர்களை பங்கேற்க வைக்க சேனல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
அண்ணனுக்காக நடனம் ஆடிய யுவன்அண்ணனுக்காக நடனம் ஆடிய யுவன் தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வேன் : விஷால் தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வேன் : ...


வாசகர் கருத்து (18)

velimalaya - Chennai,இந்தியா
19 மே, 2018 - 11:53 Report Abuse
velimalaya இந்தியாவிற்கு கம்யூனிஸ்ட் என்பது சுத்தமாக எடுபடாத கொள்கை. இதை தலையில் வைத்து ஆடுகிறார் கமல்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 மே, 2018 - 10:12 Report Abuse
Sridhar பாதத்தையே பாத்து எல்லோருக்கும் போர் அடிக்க போவுது. தன்னாலேயே இத நிப்பாட்டிடுவானுங்க. ஏற்கனவே ஷூட்டிங் ஆரம்பிச்சு பாதி முடுச்சிருப்பானுங்க. சும்மா பீலா இப்போதான் ஆளு எடுக்குற மாதிரி
Rate this:
Mahendra Babu R - Chennai,இந்தியா
19 மே, 2018 - 08:39 Report Abuse
Mahendra Babu R வேற யாரு மக்கள்தான் :D :D :D
Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
19 மே, 2018 - 08:31 Report Abuse
ரத்தினம் நாட்டுக்கு ரெம்ப தேவை இப்போ . நாட்டின் கலாச்சார சீரழிவை ஊக்குவிப்பது இது போல் பொறுப்பற்ற ஊடகங்கள் தான்.
Rate this:
Rajeshwar Narayan - Chennai,இந்தியா
19 மே, 2018 - 01:45 Report Abuse
Rajeshwar Narayan ivaru ethavathu onnai izhunga pannatum
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in