இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எல்.தேனப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இப்படம், நெதர்லாந்தில் நடந்த 47-வது ராட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகளவில் 187 படங்கள் போட்டியிட்டதில் பார்வையாளர்களுக்கான முதல் 20 இடங்களை பெற்ற படங்களில் பேரன்பு படமும் ஒன்று.
இந்நிலையில், அடுத்தப்படியாக ஷாங்காய் நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு பேரன்பு படம் தேர்வாகி உள்ளது. ஜூன் 16 முதல் 25ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பேரன்பு படம் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட இருக்கிறது.
விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்களும், அதனைத் தொடர்ந்து படமும் ரிலீஸாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.