ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அனுஷ்கா நடித்த பாகமதி படம் 2018 ஜனவரியில் வெளியானது. அதன் பிறகு தமிழ், தெலுங்கில் அனுஷ்காவுக்கு படங்கள் புக்காகவில்லை. அதனால் அவரது பெற்றோர் அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அதோடு, படப்பிடிப்பில்லாமல் ஓய்வாக இருந்து வந்த அனுஷ்காவும் தனது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஆன்மீக பயணம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் கோபிசந்த் நாயகனாக நடிக்கும் ஒரு ஆக்சன் படத்தில் அனுஷ்கா நாயகியாக ஒப்பந்தமாகியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஜெயேந்திரா இயக்கும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைக்கப்போகிறாராம் அனுஷ்கா.