ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும் என சில விஷயங்களை மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நமது ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். நடிகையராக இருக்கும் அக்கா, தங்கையுடன் ஒரு ஹீரோ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். தங்களது பேத்தி வயதுடைய நடிகையுடன் ஜோடியாக நடிப்பார்கள். தங்களை விட வயது குறைந்த நடிகையின் மகனாகவும் நடிப்பார்கள். இப்படி முரண்பாடான சில விஷயங்கள் சினிமாவில் தான் நடக்கும்.
அண்ணன், தம்பிகள் என இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பதும் தமிழ் சினிமாவில் தான் உள்ளது. அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.
இருவரும் அவர்களது படங்களில் ஒரே நடிகையுடன் மாறி மாறி ஜோடியாகவும் நடித்துக் கொள்வார்கள். சூர்யாவுடன் 'அயன்' படத்தில் நடித்த தமன்னா பின்னர் கார்த்தியுடன் 'பையா' படத்தில் ஜோடியாக நடித்தார். கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' படத்தில் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் பின்னர் சூர்யாவுடன் 'மாற்றான்' படத்தில் நடித்தார்.
'சகுனி' படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிரணிதா சுபாஷ், பின்னர் சூர்யாவுடன் 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் நடித்தார். சூர்யாவுடன் 'சிங்கம்' படத்தில் ஜோடி சேர்ந்த அனுஷ்கா, பின்னர் கார்த்தியுடன் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.
'பிரியாணி' படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா, பின்னர் 'சிங்கம் 2' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார்.
சூர்யாவுடன் 'ஆதவன், மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் நடித்த நயன்தாரா பின்னர் கார்த்தியுடன் 'காஷ்மோரா' படத்தில் நடித்தார். கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஜோடி சேர்ந்த ரகுல் ப்ரீதி, சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வரும் சாயிஷா, அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் ஜோடி சேர உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, அடுத்து சாய்பல்லவி, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.