Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா ?

16 மே, 2018 - 20:45 IST
எழுத்தின் அளவு:
Did-Ajith-hear-FEFSIs-demand

தமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த பிலிம் சிட்டி அங்கு டைடல் பார்க் வந்ததால் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாகவும், மத்திய அரசுக்கு வருமான வரியாகவும், ஜிஎஸ்டி வரியாகவும் தரும் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு சென்னையில் படப்பிடிப்பு நடத்த பெரிய வசதிகள் எதுவும் இல்லை.

இங்கு அரசு இடங்களிலோ, பொது இடங்களிலோ படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்றால் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. மேலும், சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு தற்போது ஏவிஎம், பிரசாத் ஆகிய இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கும் திரைப்படப் படப்பிடிப்புகளை விட டிவி படப்பிடிப்புகள்தான் அதிகம் நடக்கின்றன. சமீபகாலத்தில் பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினிகாந்த்தின் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகம் நடைபெற்றது. ஆனால், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடப்பதை விட ஹைதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. தற்போது கூட விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு வட சென்னை போன்ற செட்டை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளை தேவை இருந்தால் மட்டும் வெளிமாநிலங்களில் நடத்தலாம், இல்லை என்றால் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிழைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு அவர் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளரிடம் சொல்வாரா என இங்குள்ள தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
2 பில்லியன் வசூலைத் தாண்டுமா 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'2 பில்லியன் வசூலைத் தாண்டுமா ... எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ...


வாசகர் கருத்து (7)

Vijay - Bangalore,இந்தியா
17 மே, 2018 - 08:27 Report Abuse
Vijay இயக்குனர் தயாரிப்பாளர் எங்க சொல்லுறாங்களோ அங்க தான் ஹீரோ நடிச்சி கொடுக்கமுடியும் .... இதுல இவரு என்ன செய்யவரு பாவம் .... போட்டோ சூப்பர் எப்ப பாரு 10 பேரு நடுவுல நின்னுகிட்டு .....
Rate this:
Karthik TVR - Tiruvarur,இந்தியா
17 மே, 2018 - 08:20 Report Abuse
Karthik TVR நாராயண நாராயண
Rate this:
17 மே, 2018 - 07:37 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் ஆரம்பிச்சாச்சா...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 மே, 2018 - 04:16 Report Abuse
J.V. Iyer ஏன்யா சும்மா இருப்பவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்? அவர் தன்னிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை நன்றாக வைத்துக்கொள்கிறார். இப்படி எல்லோரும் செய்தால், பிரச்சினை சுமுகமாக முடியும். அவர் இதெற்கெயெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவையில்லை.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
16 மே, 2018 - 22:44 Report Abuse
VELAN S சினிமாவே வேண்டாம், பேசாமே, காவிரி நீர் கிடைக்க போராடிட்டு, விவசாயத்தை செய்ய பாருங்க.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in