Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 பில்லியன் வசூலைத் தாண்டுமா 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'

16 மே, 2018 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Did-Avengers-will-collect-2-billion-US-Dollar

உலக அளவில் மிகப் பெரும் வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ள 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து வசூலைக் குவித்த இந்தப் படம் தற்போது வரை 1.650 பில்லியன் யுஎஸ் டாலரை உலக அளவில் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதன் வசூல் 550 மில்லியன் யுஎஸ் டாலராக உள்ளது.

இந்தியாவில் சுமார் 260 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 'அவெஞ்சர்ஸ்' படத்தைத் தயாரித்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மொத்த வசூல் 3 பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் வெளியிட்ட 'பிளாக் பாந்த்ர்' படம் 1.342 பில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது.

இந்த வார இறுதிக்குள் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூல் 1.8 பில்லியன் யுஎஸ் டாலரைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வசூல் 3 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டும். 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூலும் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் வரலாற்றில் அரையாண்டுக்குள்ளாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகபட்ச வசூல் இது என்கிறார்கள்.

Advertisement
தெலுங்கில் தனி இடத்தைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்தெலுங்கில் தனி இடத்தைப் பிடித்த ... தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா ? தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in