ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலக அளவில் மிகப் பெரும் வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ள 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து வசூலைக் குவித்த இந்தப் படம் தற்போது வரை 1.650 பில்லியன் யுஎஸ் டாலரை உலக அளவில் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதன் வசூல் 550 மில்லியன் யுஎஸ் டாலராக உள்ளது.
இந்தியாவில் சுமார் 260 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் 'அவெஞ்சர்ஸ்' படத்தைத் தயாரித்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மொத்த வசூல் 3 பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் வெளியிட்ட 'பிளாக் பாந்த்ர்' படம் 1.342 பில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது.
இந்த வார இறுதிக்குள் 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூல் 1.8 பில்லியன் யுஎஸ் டாலரைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வசூல் 3 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டும். 'அவெஞ்சர்ஸ்' படத்தின் வசூலும் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைத் தாண்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் வரலாற்றில் அரையாண்டுக்குள்ளாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகபட்ச வசூல் இது என்கிறார்கள்.