ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாகிறது. அவரது முந்தையப் படமான அண்ணாதுரை சரியாகப் போகாததினால் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக காளி படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
காளி படம் தெலுங்கில் காசி என்ற பெயரில் வெளியாகிறது. அங்கே படத்தின் ரிலீஸ் வேலைகளை கவனிக்க விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா ஹைதராபாத் சென்று முகாமிட்டுள்ளார். அங்கிருந்தபடியே ஆந்திராவில் வெளியிட வேண்டிய தியேட்டர்களை முடிவு செய்கிறார்.
இதற்கிடையில் தனது அடுத்த படங்களாக 'திமிரு பிடிச்சவன்', 'கொலைக்காரன்', 'திருடன்', மற்றும் 'மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படம் படங்களில் நடிக்கிறார். 'திமிரு பிடிச்சவன்' படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இயக்குகிறார்.
ஆண்ட்ரூ இயக்கும் 'கொலைகாரன்' படத்தில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான விஷாலின் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். அவர் நடித்த வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அர்ஜுனுக்கு வில்லன் வேடத்தில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் தேடிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில் விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்தில் நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.