வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அதர்வா முதன்முறையாக தயாரித்து நடிக்கும் படம் - செம போத ஆகாதே. பாணா காத்தாடி படத்தின் மூலம் அதர்வாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம் இது.
செம போத ஆகாத படத்தில் மிஷ்டி, அனைகா சோதி ஆகிய இரு ஹீரோயின்கள் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, திவ்யர்தஷினி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு இம்மாதம் 18 அன்று படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர். அதே தேதியில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி ஆகிய படங்கள் வெளியாவதால் செம போத ஆகாதே படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை இம்மாதம் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். மே 25ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம படம் வெளியாகிறது. அதே தேதியில் செம போதை ஆகாதே படமும் வெளியானால் ரசிகர்கள் குழப்பம் அடைய வாய்ப்பிருக்கிறது.