மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாகுபலி, பாகுபலி-2, பாகமதி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அனுஷ்கா, அதற்கடுத்து எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. தமிழில் கவுதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளார். ஆனாலும் அதுவும் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
நிறைய பட வாய்ப்பு வந்தாலும் அனுஷ்கா நடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஆனால் அதுவும் சரியாக அமையவில்லை.
அனுஷ்காவின் ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாக குடும்ப ஜோதிடர் சொன்னாராம். அதனால் ஐதராபாத்தில் உள்ள அனுஷ்காவின் இல்லத்தில் சில பரிகார பூஜைகள் நடைபெற்றுள்ளன.
திருமண தோஷம் நீங்க வேண்டி சமீபகாலமாக ஆன்மிக சுற்றுலாவும் மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே அவரின் ஆன்மிக சுற்றுபயண போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.