இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளரான பி.ஆர்.விஜயலட்சுமி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அபியும் அனுவும் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் மலையாள நடிகர் டொவினோ தாமசும், பியா பாஜ்பாயும் நடித்துள்ளனர். படம் வருகிற 25ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி அவர் கூறியதாவது:
அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது.
கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன.
இந்த கதைக்கு ஜோடிப் பொருத்தம் மிகவும் முக்கியம். பலமுறை யோசித்துதான் இந்த ஜோடியை தேர்வு செய்தேன். நான் எதிர்பார்த்தது போலவே கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகி பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்" என்கிறார் விஜயலட்சுமி.