மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஷால் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் இரும்புத்திரை. புதியவர் மித்ரன் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து விஷாலின் சண்டக்கோழி 2 வெளியாக உள்ளது.
சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு விஷால், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்., நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். விஷால் ஜோடியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது படத்திற்கு அயோக்யா என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதே டெம்பர் படம், ரன்வீர் சிங் நடிப்பில் ஹிந்தியிலும் சிம்பா என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது.