Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்நாடகாவின் 'வடிவேலு'வாக ஆன பிரகாஷ்ராஜ்

15 மே, 2018 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-becomes-karnataka-Vadivelu

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்தியா எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், சில நடிகர்களுக்குத்தான் அரசியல் ஆர்பாட்டமான வரவேற்பைக் கொடுத்துள்ளது. பலருக்கோ, அதிர்ச்சியைக் கொடுத்து அவர்களுக்கு அவமானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனால் தான், அமிதாப்பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட அரசியலை விட்டு விலகினர்.

தமிழ்நாட்டில் பெண்களால் பெரிதும் போற்றப்பட்ட நடிகர் சிவாஜிகணேசன் தனிக்கட்சி ஆரம்பித்து படுதோல்வியடைந்து கட்சிக்கே மூடுவிழா நடத்தினார். ஆனால், எம்ஜிஆர் அரசியலில் சாதிக்க மக்கள் ஆதரவு இருந்தது. தமிழ்நாட்டில் அடுத்து அரசியலில் இறங்க உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும்.

கர்நாடகாவில் இந்த சட்டசபை தேர்தலில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. பாஜகவிற்கு எதிராக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனக்கு ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கும் அரசியல் தான் காரணம் என்றார். பாஜக ஆட்சிக்கு வரவே கூடாது என பிரச்சாரம் செய்தார். ஆனால், மக்களின் எண்ணமோ வேறு மாதிரி அமைந்துவிட்டது.

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அந்தத் தேர்தலில் திமுக தோற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் வடிவேலுவை யாருமே நடிக்க அழைக்கவில்லை. ஏன், ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என வடிவேலுவை நடிக்கக் கூப்பிடவேயில்லை. அத்துடன் அவருடைய திரையுலக வளர்ச்சியும் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள கர்நாடகா தேர்தலில் அப்போதைய வடிவேலு நிலைதான் பிரகாஷ்ராஜுக்கு ஏற்பட்டுள்ளது. இனி, அவரை கன்னடப் படங்களில் நடிக்க அழைப்பார்களா ?.

ஜஸ்ட் ஆஸ்கிங் பிரகாஷ்ராஜ்...!?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in