இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி நடித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரனி உள்பட பலர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 9-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை பல சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய முன் வந்தபோதும் தயாரிப்பாளர் தனுஷ் யாருக்கும் உரிமம் கொடுக்கவில்லை. வுண்டர்பார் நிறுவனமே தனது இணையதள பக்கத்தில் யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தது.
இதனால் ரஜினியின் ரசிகர்கள் பலரும் காலா பாடல் வெளியீட்டு விழாவை காண முடியவில்லை. இதனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தனுஷ், தற்போது காலா பாடல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்ப விஜய் டி.விக்கு வழங்கி உள்ளார் வருகிற 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி முதல் ஒளிபரப்பாகிறது. 3 மணி நேரம் வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன.