நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கார்த்தி நடிப்பில் இதற்கு முன் வெளியான படம் 'தீரன் அதிகாரம் ஒன்று' . இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கியது விஜய் டிவி. எனவே படம் வெளியான சில மாதங்களிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பியது. அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியது.
இந்த நிறுவனங்கள் உடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் கார்த்தி. அவரது புதிய படமான கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், டிஜிட்டல் மூலம் திரையிடப்படும் உரிமையை அமேசானும் வாங்கியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா முதலானோர் நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை சூர்யாவின் '2D ENTERTAINMENT' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.