தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார்.
சமீப நாட்களாக இவர் திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஐந்து பேரை மேடைக்கு அழைத்து இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட வைத்தனர் படக்குழுவினர்.