சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா நடிக்கும் படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது.. இதை தொடர்ந்து தெலுங்கு இளம் நடிகரும் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு சிரிஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஏற்கனவே 'கௌரவம்' படத்தில் நடித்துள்ள அல்லு சிரிஷுக்கு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் ஆகும்..
கடந்த வருடம் மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்சனில் வெளியான ''1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' மோகன்லாலுடன் இணைந்து ராணுவ வீரர் கேரக்டரில் நடித்திருந்தார் அல்லு சிரிஷ். தற்போது மோகன்லாலுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அல்லு சிரிஷ்.