தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள விருபுவதாக நடிகை நிகிஷா பட்டேல் சொன்னதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது அந்த செய்தியை மறுத்து ஒரு பேட்டி அளித்துள்ளார் நிகிஷா பட்டேல்.
அதில் அவர் கூறும்போது, பிரபுதேவாவைப்போன்று ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத்தான் அந்த பேட்டியில் நான் கூறியிருந்தேன். ஆனால் அதை தவறுதலாக புரிந்து கொண்டு பிரபு தேவாவையே நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக செய்தி வெளியாகிவிட்டது என்று கூறியுள்ளார் நிகிஷா படடேல்.
மேலும், பிரபுதேவா எனது குடும்பம் நண்பர் இல்லை. அவர் குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு ஜஸ்ட் பிரண்ட் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் நிகிஷா பட்டேல்.