ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வணக்கம் சென்னை படத்தை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. இவர் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சீரியசான நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியை இந்த படத்தில் ஒரு கலகலப்பான நடிகராகவும் மாற்றியிருப்பதாக சொல்கிறார் கிருத்திகா உதயநிதி.
மேலும் அவர் கூறும்போது, இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என்று நான்கு ஹீரோயினிகள் இருக்கிறார்கள். அவர்களில் அம்ரிதா, ஷில்பாவுடன் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ் காட்சிகள் நிறையவே உள்ளது.
குறிப்பாக, சில ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கியபோது அவர் ரொம்பவே இன்வால்வாகி விட்டார். அதனால் நான் கட் சொன்ன பிறகும் அவர் அதை கேர் பண்ணாமல், ஹீரோயினி யுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று சொல்லி விஜய் ஆண்டனியை மேடையிலேயே கலாய்த்தார் கிருத்திகா உதயநிதி.