ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொன்ராமின் சீமராசா படத்தை முடித்துவிட்டு, இன்னு நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படம் மற்றும் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ராஜேஷ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில், நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப்குமார் இயக்கும், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்திலிருந்து எதுவரையோ என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், இப்போது கல்யாண வயசு என்கிற பாடலை அனிருத் வெளியிட உள்ளார். இதற்கான அறிமுக வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட அனிருத், அதில் சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக அறிமுகம் செய்துள்ளார்.
For the first time..
Lyricist @Siva_Kartikeyan 🥁🥁🥁#KalyaanaVayasu , second single from #KolamaavuKokila on May 17th :) pic.twitter.com/PNudHQ5Atj
— Anirudh Ravichander (@anirudhofficial) May 11, 2018
நடிகர், பாடகர், தயாரிப்பாளரை தொடர்ந்து பாடலாசிரியராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.