ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாது தெலுங்குத் திரையுலகினரிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக சாவித்ரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷை தென்னிந்தியத் திரையுலகத்தில் உள்ள பலரும் பாராட்டி வருகிறார்கள். மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஏற்கெனவே பாராட்டிவிட்டார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'மகாநதி' படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா, பிரியங்கா, படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஆகியோரை பூங்கொத்து கொடுத்து அற்புதமான படத்தை எடுத்திருப்பதாகப் பாராட்டியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல நடிகர்கள், நடிகைகள் படக்குழுவினரைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். வசூலையும் மீறி படத்தைப் பலரும் இடைவிடாமல் பாராட்டி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் கலைஞர்கள் கூட்டணி அவர்கள் பிறக்காதற்கு முன்பாகவே வாழ்ந்து மறைந்த ஒரு நடிகையின் வாழ்க்கை இவ்வளவு யதார்த்தமாக எடுத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.