அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சூர்யா தனது 2டி மற்றும் சில நிறுவனங்களுடன் இணைந்து ஒரு குறும்பட போட்டி நடத்தியுள்ளார். இதில் கலந்து கொண்ட ஆயிரம் படங்களில் 26 படங்கள் தேர்வாகியிருக்கிறது. இதிலிருந்து 5 படங்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த படங்களை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடுகிறார்கள். மேலும் இதில் சிறப்பான குறும்படம் இயக்கியவர்களுக்கு தனது 2டி நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பு கொடுக்க எண்ணியுள்ளார் சூர்யா.
தற்போது தேர்வாகியிருக்கும் 26 குறும்படங்களில் ராதாரவி நாயகனாக நடித்துள்ள கற்றவை பற்றவை குறிப்பிடத்தக்கது. கார்த்திக் குமார் இயக்கியுள்ள இந்த குறும்படம் ஆணவக்கொலைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராதாரவி கடவுள் முருகன் வேடத்திலேயே நடித்துள்ளார். அவர் ஒரு இளைஞருக்கு டைம் மிஷின் கொடுக்க அது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதுதான் இந்த கற்றவை பற்றவை படத்தின் கதை.