தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வட சென்னை, மாரி-2 படங்களில் நடித்து வரும் தனுஷ், 'த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார்.
காமெடி அட்வெஞ்சரான இந்தப் படம், இம்மாதம் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை உலகம் முழுக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதை டப் செய்து தமிழிலும் வெளியிட வேண்டும் விரும்பிய தனுஷ், சோனி நிறுவனத்திடம் பேசியுள்ளார். தனுஷின் விருப்பத்தை ஏற்று அப்படத்தை தமிழில் வெளியிடுகின்றனர். 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் தனுஷ். அவரது நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊதுங்கடா சங்கு' என்ற பாடலில் 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற வரி இடம்பெற்றது.
தனுஷ் எழுதிய அந்த வரியையே தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக வைத்துவிட்டார் தனுஷ்.