'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரைக்கு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ்நாட்டில் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், அடுத்தமாதம் துவங்க இருக்கிறது. கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.
சீசன் 2வில் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வருகின்றன. இதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் அடக்கம். ஆனால் இதை கஸ்தூரி மறுத்துள்ளார்.
"பிக்பாஸில் பங்கேற்க யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் பங்கேற்கபோவதில்லை. பிக்பாஸை விட சின்ன பாஸ் தான் முக்கியம்" என டுவிட்டரில் தன் மகன் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார் கஸ்தூரி.