ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக 'மகாநதி' என்கிற படம் தெலுங்கில் வெளியாகியுள்ளது. தமிழில் 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. வம்சி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகர் மோகன்லாலும் கீர்த்தி, துல்கர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப்படத்தை பார்ப்பதாகவும் கூறியுள்ளார், கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் கீதாஞ்சலி என்கிற மலையாளப்படத்தில் தான் அறிமுகமானார்.. அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே மோகன்லாலின் நெருங்கிய நண்பர்களின் நட்சத்திர வாரிசுகள் என்பதாலும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மோகன்லால்.