தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ், முதன்முறையாக ஹாலிவுட்டில் நடித்துள்ள படம் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்". கென் ஸ்காட் இயக்கி உள்ள இப்படம், பிரென்ஞ் மொழியில் உருவாகி உள்ளது. இம்மாதம் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் உலகப்புகழ்ப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு, தனுஷின் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" படமும் திரையிடப்பட இருக்கிறது.
இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர். கேன்ஸ் பட விழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.