‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் நடிகர், அங்கத் பேடி - நடிகை, நேஹா துபியா திருமணம், மும்பையில் எளிமையாக நடந்தது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர், பிஷன் சிங் பேடியின் மகனும், பாலிவுட் நடிகருமான, அங்கத் பேடி, 35, பிங்க் உள்ளிட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், சுப் சுப் கே, தும்ஹரி சுலு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை, நேஹா துபியாவை, 37, காதலித்து வந்தார். நேற்று, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், அங்கத் பேடி - நேஹா துபியா திருமணம், மிக எளிமையான முறையில் நடந்தது.
இருவரும், தங்கள் திருமண புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். மேலும், சிறந்த தோழியாக இருந்தவர், தற்போது, மனைவி ஆகி விட்டார் என, நடிகர், அங்கத் பேடி தெரிவித்து உள்ளார்.
தயாரிப்பாளர், கரன் ஜோஹர், நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.