சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பிரபல நாடக மற்றும் சினிமா நடிகர் நீலு என்ற ராமய்யா நீலகண்டன் (81), உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(மே 10) மதியம் 2.30 மணியளவில் காலமானார்.
நாடகங்களில் நடித்து ஜொலித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நீலு. ஆயிரக்கணக்கான நாடங்களில் நடித்துள்ள நீலு, நாடகத்தை முதன்மையாகவும், சினிமாவை இரண்டாம் ரகமாகவும் ஏற்று நடித்து வந்தார்.
சோ ராமசாமின் நாடா குழுவில் நடித்து வந்த நீலு, ஒய்ஜிமகேந்திரன், கிரேஸி மோகன், எஸ்விசேகர், மவுலி போன்ற பலரின் நாடக குழுவிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படம் ஆயிரம் பொய். இந்தப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். தொடர்ந்து கே பாலசந்தரின் நூற்றுக்கு நூறு, சிவாஜியின் கெரளவம், பாரத விலாஸ், சோவின் முகமது பின் துக்ளக் (நாடகம் மற்றும் படம்), விஜயகாந்த்தின் வேலும் மயிலும் துணை, கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அந்தக்கால சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி, இந்தக்கால அஜித், மாதவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார்.
நீலுவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.