Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும் : ரஜினி

09 மே, 2018 - 21:47 IST
எழுத்தின் அளவு:

ரஜினியின் காலா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது....

இது காலா இசை வெளியீடு போன்று தெரியவில்லை. படத்தின் வெற்றி விழாவாக தெரிகிறது. சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் பேசி கவுரவித்தார் திமுக., தலைவர் கருணாநிதி. அவரின் குரலை கேட்க கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாய் நானும் ஆவலாய் உள்ளேன்.

ரோபோ படத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ உதவியாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மீண்டும் வந்தேன். நடிப்பை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. நான் நடித்து முடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நதிகள் இணைப்பு கனவு
தென்னிந்திய நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு. அது நிறைவேறி நான் கண்மூடினால் கூட கவலையில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்.

அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது
புத்திசாலியுடன் பழகலாம், அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை. யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.

தனுஷ் என் மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை, நல்ல பையன், அப்பா - அம்மாவை மதிக்கிறார்.

காலாவில் அரசியல்

ரசிகர்களை மனதை வைத்து தான் படத்தின் கதையை கேட்கிறேன். கபாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காலா படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் அரசியல் இருக்கிறது.

பெரிய இடம் காத்திருக்கிறது
ரஞ்சித் இயக்குநராக மட்டுமல்லாது, நிச்சயம் பெரிய ஆளாக வருவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர். நிச்சயம் ரஞ்சித்திற்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ரஞ்சித் திட்டமிட்டு படத்தை முடிப்பவர், தயாரிப்பாளர்களின் இயக்குநர்.

என்னை கவர்ந்த வில்லன்
நான் நடித்த இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு படத்தில் இரண்டு வில்லன்கள் தான் என்னை கவர்ந்தவர்கள் ஒன்று பாட்ஷா ஆண்டனி, மற்றொருவர் படையப்பா நீலாம்பரி. தற்போது அந்த வரிசையில் காலாவின் நானா படேக்கரும் இணைந்துள்ளார். அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்
நான் ஏற்கனவே சொல்வது போன்று தாய், தந்தையரை முதலில் கவனியுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு இடம் கொடுங்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு கலர், எடை உள்ளது. எனவே மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.

நல்ல நேரம் பிறக்கும்
கடமை இருக்கு, நேரம் பார்த்து வருவேன். நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்!

இவ்வாறு ரஜினி பேசினார்.

Advertisement
ரஜினியின் பவரே காலா - ரஞ்சித்ரஜினியின் பவரே காலா - ரஞ்சித் ரஜினியை விமர்சித்தவர்களுக்கு தனுஷ் பதிலடி ரஜினியை விமர்சித்தவர்களுக்கு தனுஷ் ...


வாசகர் கருத்து (7)

R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
10 மே, 2018 - 12:02 Report Abuse
R.MURALIKRISHNAN இப்படித்தான் எல்லாரும் சொல்லறாங்க 20 வருஷமா ஒன்னத்தையும் காணோம்
Rate this:
sam - Doha,கத்தார்
10 மே, 2018 - 11:20 Report Abuse
sam எப்பா நீங்க போய் முதலில் உங்க வீட்டு அரசியலை சரி செய்து விட்டு, தமிழ் மக்களை பற்றி கவலை படுங்கள். தமிழ் மக்களுக்கு தெரியும் தமிழ் நாட்டுக்கு எப்போது விடிவு காலம் வரும் என்று.
Rate this:
P Kumar - coimbatore,இந்தியா
10 மே, 2018 - 10:39 Report Abuse
P Kumar தம்பி நீ என்ன பேசுனாலும் தேர்தல்ல ஜெயிக்க முடியாது......
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
10 மே, 2018 - 10:20 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இப்போ கேட்ட நேரம்ன்னு சொல்றாரு. -
Rate this:
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
10 மே, 2018 - 08:49 Report Abuse
Balagan Krishnan No there will be no good time for Tamil people unless they changed and stopped worshipping cine heros.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in