ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பு கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், டாஸ்மாக் கடைகளை யார் வேண்டுமானாலும் நிர்வகிக்க முடியும். தொழில் நடத்தவும், நிர்வாகத்தை நிர்வகிக்கவும் தகுதி, திறன் வாய்ந்தவர்களால் தான் முடியும். பி.இ., பி.எச்.டி படித்தவர்கள் எல்லாம் விஏஒ., ஆக வேலை செய்யும் சூழல் உள்ளது. இந்த அவலநிலை மாற வேண்டும்.
நான் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அரசியலில் தொடர்வேன். காவிரி விவகாரம் எளிதில் தீர்க்கக்கூடியாது. மக்களின் வாழ்வாதார பிரச்னையில் அரசியல் செய்யப்படுகிறது. காவிரி பிரச்னையில் உரிமைக்காக நாம் போராடி ஆக வேண்டும். நிச்சயம் போராடுவோம். தமிழகத்தில் மழைநீர் அதிகளவு உள்ளது. அதனை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.