ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஜோதிகா சினிமாவில் ரீ-என்ட்ரியான பிறகு பிற மொழிகளில் வெளிவரும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்வு செய்து ரீ-மேக்கில் நடித்து வருகிறார். அந்தவகையில், மலையாள ரீ-மேக்கான ஹவ் ஓல்ட் ஆர் யூ, 36 வயதினிலே (ஹவ் ஓல்ட் ஆர் யூ) படத்தில் நடித்த அவர், தற்போது தும்ஹரி சூலு ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் காற்றின் மொழி என்ற டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் மலையாள ரீமேக் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.
கடந்த மாதம் மலையாளத்தில் வெளிவந்த படம் மோகன்லால். இதில் மஞ்சுவாரியார், இந்திரஜித், சலீம் குமார், அஜு வர்கீஸ், சித்திக் உள்பட பலர் நடித்திருந்தார்கள். டோனி ஜோசப், பிரகாஷ் அலெக்ஸ் இசை அமைத்திருந்தார்கள், சாஜி குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் சாஜித் யாஹியா இயக்கி இருந்தார்.
இதில் நடுத்தர வயது பெண் ஒருத்தி ஒரு நடிகரின் தீவிர ரசிகையாக இருப்பதால் வரும் பிரச்சினைகள் பற்றி காமெடியாக சொன்ன படம். மஞ்சுவாரியார் மோகன்லாலின் ரசிகையாக நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
சமீபத்தில் படத்தை பார்த்த ஜோதிகாக அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படத்தின் தலைப்பு ரஜினி செல்வி. ஜோதிகா, ரஜினியின் தீவிர ரசிகையாக நடிக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.