'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் நடிகை சாவித்ரி. அந்தக் காலத்தில் அவரைப் போல யதார்த்தமாக நடித்த நடிகைகள் மிகவும் குறைவு. மற்ற நடிகைகளின் நடிப்பில் ஒரு நாடகத்தனம் இருக்கும். ஆனால், சாவித்ரியிடம் அதைப் பார்க்க முடியாது. அவர் நடித்த பல படங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் அழுத்தமாகப் பதிந்தவை.
அவருடைய திரையுலக வாழ்க்கை ஒளி வீசிய அளவிற்கு, தனிப்பட்ட வாழ்க்கை ஒளிமயமாக அமையவில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உடல்நலம் குன்றி 45 வயதிலேயே மரணம் அடைந்தார்.
அவருடைய வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார்கள். அப்படத்தை தமிழிலும் நேரடியாகவே எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், படம் வந்தால் தான் அது உண்மையாக இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
'நடிகையர் திலகம்' என சாவித்ரியின் பட்டப் பெயரில் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படம் இந்தக் கால ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை எப்படி அதிலிருந்து வீழ்ந்து இறந்து போனார் என்பதை பல அரிய தகவல்களுடன் படத்தில் இணைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழில் 'பயோகிராபி' படங்கள் வருவது குறைவுதான். அந்தக் குறையை இந்த 'நடிகையர் திலகம்' தீர்த்து வைக்குமா என்பது மே 11ம் தேதிதான் தெரியும்.