ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட தயாரிப்பான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் உலக அளவில் 11 நாட்களில் 7000 கோடிக்கும் அதிகமாக வசூலாகி பெரிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவிலும் இதுவரை எந்த ஒரு ஹாலிவுட் படமும் புரியாத சாதனையை இந்தப் படம் படைத்திருக்கிறது. 11 நாட்களில் இந்தியாவில் சுமார் 246 கோடிகளை வசூலித்துள்ளது. நிகர வசூலாக 190 கோடி வரை வசூலாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த நிகர வசூல் 200 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இதுவரை அதிக வசூலைப் பெற்ற ஹாலிவுட் படமாக 'தி ஜங்கிள் புக்' படம் இருக்கிறது. அதன் நிகர வசூலான 188 கோடி ரூபாயை 'அவெஞ்சர்ஸ்' தாண்டிவிட்டது. 'தி ஜங்கிள் புக்' படத்தின் மொத்த வசூலான 261 கோடி ரூபாயைத் தாண்ட இன்னும் 15 கோடிகள் தான் தேவை. அதை இந்த வார இறுதிக்குள் வசூலித்துவிடும்.
'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது.