டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை படத்தை தயாரித்துள்ள வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் நடிகர் தனுஷ் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அழைப்பிதழுடன் ஸ்மார்ட் கார்டு பாசும் வழங்கப்பட்டுள்ளது. வொண்டர்பார் நிறுவனமே யூ டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையில் இந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 8500 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியாக இருக்கை பகுதியும் ஒதுக்கப்படுகிறது. காலா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தனது புதிய அரசியல் கட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ரஜினி நடத்த விரும்புவதாக தெரிகிறது. இதில் அவர் காலா படம் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு அதன் பிறகு தனது அரசியல் நிலைப்பாடுகள், கட்சி தொடங்கும் ஏற்பாடுகள், மன்றத்தினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.