Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

திரைப்பட பாடலாசிரியர் மதன்கார்கி!

29 மார், 2012 - 17:30 IST
எழுத்தின் அளவு:

பேட்டி:எஸ்.ரஜத்


கவிஞர் என்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத பரபரப்பான கம்ப்யூட்டர் இளைஞராக இருக்கிறார் மதன்கார்கி. ஒரே சமயத்தில் இரண்டு லேப்டாப்களில் வேலை செய்கிறார். திரைப்பட இளம் பாடலாசிரியர் மட்டுமல்ல அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் துறையில் உதவி பேராசிரியர் கம்ப்யூட்டர் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பவர்.

நாற்பது படங்களில் இவர் எழுதியிருக்கும் திரைப்பட பாடல்களின் எண்ணிக்கை  80ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறஆ. இவர் எழுதிய முதல் பாடலே சூப்பர் ஹிட்டான எந்திரன் படத்தில் இடம்பெற்ற "இரும்பிலே ஒரு இதயம்". அடுத்த ஹிட் "கோ" படத்தில் வரும் "என்னமோ ஏதோ". எல்லா டெலிவிஷன் சேனல்கள் எஃப் எம் ரேடியோக்களிலும் நம்பர் ஒன்றாக இருக்கும் ஷங்கரின் நண்பன் படத்தில் வரும் "அஸ்கலஸ்கா" இளைஞர்களின் இப்போதைய காதல் கீதம். தமிழ், இந்தி, தெலுங்கு, சீன மொழி, துருக்கி, ஜெர்மன். பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆப்ரிக்கன் உள்பட பதினாறு மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை இணைத்து ஹாரிஸ் ஜெயராஜ் டியூனுக்கு எழுதப்பட்ட பாடல் அது. இயக்குனர் ஷங்கர். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் மிகவும் பாராட்டிய பாடல். "காதலில் சொதப்புவது எப்படி" சமீபத்திய படத்தில் மதன் கார்ககி எழுதிய பார்வதி பார்வதி மற்றும் அழைப்பாயா அழைப்பாயா பாடல்கள் இவரது லேட்டஸ்ட் ஹிட்ஸ்!

உங்களுக்குள் திரைப்பட கவிஞர் இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?
ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி., டாக்டர் பட்டம் படிக்கும் போது மாலை நேரங்களில் ப்ரீ டயம் கிடைக்கும். போட்டோ எடுப்பது, சமையல் செய்வது தவிர சில நேரம் பாடல்கள் எழுதி நானே டியூன் போட்டு அதை நண்பர்கள் கேட்டு திருப்திகரமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு உற்சாகமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் படிக்கச் சென்றது ஏன்?
அமெரிக்காவில் சென்று அங்கு மாஸ்டர்ஸ் டிகிரி படிக்கத் தான் முதலில் விரும்பினேன். நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பிரச்னைகள் எழவே, ஆஸ்திரேலியாவில் மேல்படிப்பை தொடர முடிவு செய்தேன். மாஸ்டர்ஸ் டிகிரி இரண்டு வருடங்கள், டாக்வர் பட்டத்திற்கு மூன்றரை வருடங்கள் அங்கு படித்து முடித்தேன்.
@ @@@@@

நீங்களும் உங்கள் தந்தையும் ஒரே படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறீர்களா?
எந்திரன் படத்தில் நாங்கள் இருவரும் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. டைரக்டர் ஷங்கருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இப்போது இயக்குநர் மணிரத்தினம் அறிவித்திருக்கும் புதிய படம் கடல் . அதிலும் தந்தையும், நானும்பாடல்கள் எழுதுகிறோம். இந்திய திரைப்பட வரலாற்றில் தந்தையும் மகனும் ஒரே படத்திற்கு பாடல்கள் எழுதுவது மிகவும் அரிது என்று அறிககிறேன். பாடலைத் தவிர எந்திரன், நண்பன் படங்களுக்கு இயக்குநர் ஷங்கருடன் இணைந்து வசனம், டயலாக் எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

தந்தையிடம் பெற்ற பாராட்டு?
டாக்டர் பட்டம் பெற்ற போது, பிரபலங்கள் வீட்டில் பிள்ளைகள் படிக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். நீயே விரும்பிய துறையில் நன்றாக படித்து டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தேவையான தகுதிகள் இருந்ததால் உதவிப் பேராசிரியர் பதவி எவ்வித சிபாரிசும் இன்றி கிடைத்தபோதும் பாராட்டினார். அப்போது தான் நான் எழுதிய இரும்பிலே இதயம் பாடலை முதல் முறையாக கேட்டார். அருமையாக எழுதியிருக்கிறாய் என்று தந்தை பாராட்டினார்.

சகோதரர் கபிலன் பற்றி?
புதிய தலைமுறை டி.வி., சேனலில் தயாரிப்பாளராக இருக்கிறார். கம்யூனிகேஷன்ஸ் துறையில் ஆஸ்திரேலியாவில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். நாவல்கள் புத்தகங்கள் எழுதுகிறார். தெளிவான இலக்கோடும்,  தன்னம்பிக்கையோடும் செயல்படும் சாதனை இளைஞர்.
@ @@@@@

தாய் தந்தை இருவரிடம் நீங்கள் பெற்ற சிறந்த அட்வைஸ்?
எப்படி படிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லாம் என் தாய் பொன்மணி வைரமுத்து எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். Knowledgeஐ update  செய்ய வேண்டும், தேடல் எப்போதுமே தொடர வேண்டும் என்பது தந்தையிடமிருந்து பெற்ற முக்கியமான அறிவுரை.

கம்ப்யூட்டர் கவிஞர் என்று உங்களை அழைக்கலாமா?
பட்டங்கள் கொடுப்பதிலும், பெறுவதிலும் விருப்பமில்லை, பாடலாசிரியர் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். எப்போதும் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதால் நான் எழுதும் பாடல்களையும் லேப் டாப்பில் தான் எழுதுகிறேன்.


பாடல் எழுதுவதற்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம்?
போட்டோகிராபி, சமையல், நேரம் கிடைக்கும் போது சைனீஸ், இத்தாலியன் உணவு சமைப்பேன். விரும்பி செய்வேன். ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் CURRY CONNECTION என்ற ரெஸ்டாரண்டில் வெயிட்டராகவும், பின்னர் ஒரு வருடம் ஃசெப்பாகவும் பணிபுரிந்த இனிமையான அனுபவம் உண்டு. காய்ந்த மிளகாய், சிக்கன், மீன், பன்னீர், தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து சம்பல் என்கிற இந்தோனேஷியன் உணவு அயிட்டம் செய்வேன். சாதத்துடன் சாப்பிடலாம். ஸெமி கிரேவியாக இருக்கும்.

தந்தை எழுதிய திரைப்பட பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பத்து பாடல்கள்?
6,000 பாடல்களுக்கு மேல் அவர் எழுதியிருகு்கிறார். அவற்றில் எனக்குப் பிடித்தது 100 என்றால் கூட அந்த எண்ணிக்கை குறைவு தான். ஆனால் சொஞ்சமாவது நியாயமாக இருந்திருக்கும். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
1.மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே, சாமுராய் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் பாடியிருப்பார். இயற்கையை போற்றி ரசித்து என் தந்தை எழுதிய பாடல்களில் இயற்கையிடமிருந்து மனிதன் என்ன என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று விளக்குகிற பாடல் இது தான். இந்தப் படமும், பாடலும் பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

2.பொன்மாலைப் பொழுது இது ஒரு பொன்மாலைப் பொழுது, நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில், எஸ்.பி.பி., பாடிய சூப்பர் ஹிட் பாடல். இந்த பாட்டுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாரதிராஜாவிடம் இருந்து தகவல் வந்து என் தந்தை இளையராஜாவை சந்திக்கிறார். அவர் கொடுத்த டியூனுக்கு ஏற்ப வரிகள் எழுதுகிறார். என் தாய் பொன்மணி வைரமுத்து பிரசவத்திற்காக கோடம்பாக்கத்தில் உள்ள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 1980 மார்ச் 10, அன்று நான் பிறக்கிறேன், பாடலும் பிறந்தது. உனக்கும், எனக்கும் ஒரே நாளில் டெலிவரி என்று என் தந்தை என் தாயிடம் சொல்லியிருக்கிறார். என் தந்தை திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல் அது.

3.பூங்காற்றிலே உன் வாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் .யிரே படத்திற்காக உன்னி மேனன் பாடிய ரொம்ப மொமான்டிக்கான பாடல். ஷாருக்கான், தன் காதலி மனிஷா கொய்ராலாவை நினைத்துப் பாடுவார்.

4.நீ காற்று, நான் மரம் என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன். நிலவே வா படத்திற்காக, வித்யாசாகர் இசையில், சித்ரா, ஹரிஹரன் இருவரும் பாடவியிருப்பார்கள். இரண்டும் உள்ள நெருக்கம் உறவு ரசிக்கும்படி இருக்கும். இதே வகையில் எழுதி ஹிட்டான பாடல்கள் கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு -படம் புதிய முகம். குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்- படம் டூயட். சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை படம் ரோஜா.

5.பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு ஒரு குடும்பத்தில் பொங்கும் ஆனந்தம் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் பாடல். ஜேசுதாஸ் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கரின் இந்தியன் படத்தில் வரும் பாட்டு. பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் எதற்கு? வீட்டில் மழைத் தண்ணீரில் பேப்பர் கப்பல் விடுவார் கஸ்தூரி, பேப்பர் தீர்ந்துவிடும், .டனே தந்தை கமல் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுப்பார். அதை கப்பாலாக்கும் கஸ்தூரிக்கு மகிழ்ச்சி. ஷங்கர் படங்களிலேயே பாடலை படமாக்கும் காட்சிகளில் எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த விஷூவல்ஸ் அது.

6.வா வா என் தேவதையே ராதாமோகன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் அபியும் நானும் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.மதுபால கிருஷ்ணன் பாடியிருப்பார். பெண் பிள்ளை தனி அறையில் புகுந்ததில் ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன் செய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான வரிகள்.

7.தஞ்சாவூர் மண்ணு எடுத்து, சேரன் இயக்கத்தில் பொற்காலம் படத்திற்காக கிரஷணராஜ் பாடிய பாடல். தான் மணக்க விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று முரளி கனவு காண்பார். படமும், பாடலும் சூப்பர் ஹிட்!

8.பூங்காற்று திரும்புமா ஏன் பாட்டை விரும்புமா.. பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவன் பாடியது. என் தந்தைக்கும் முதல் முறையாக தேசிய விருது பெற்றுக் கொடுத்த பாடல்.

9.காற்றின் மொழி ஒலியா, இசையா, மொழி படத்தில் ராதா மோகன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் சுஜாதா பாடியது. இதயத்தி் மொழிகள்புரிந்து விட்டால் மனிதருக்கு மொழி தேவை இல்லை, படத்தின் மையக் கருத்தாக இந்த பாடல் அமைந்திருக்கும். ஜோதிகா நடிப்பு மிகவும் பிரமாதம். அவர் நடித்த படங்களிலேயே, மொழி தான் பெஸ்ட் என்று நான் நினைக்கிறேன்.

1o.மின்னலே நீ வந்தது ஏனடி.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்.பி.பி., பாடிய இந்தப் பாடல் இடம்பெற்ற படம் மே மாதம். சோகத்தைப் பற்றி எழுதும் போது உவமைகளை தள்ளி வைத்து, உணர்ச்சிகளை மட்டும் முன்னிலைப் படுத்தினால் மனதில் ஆழமாக பதியும் என்பது என் கருத்தாக இருந்தது. இந்தப் பாட்டை விதிவிலக்காக பார்க்கிறேன்.

பத்து பாடல்களை சொல்லிவிட்டாலும் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. பட்டியல் நீட்டித் தரக்கூடாதா என்ற ஏக்கம் தான் வருகிறது. இன்னும் பத்து பாடல்கள் பட்டியல். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இளைய நிலா பொழிகிறதே, சிந்து பைரவியில் பாடறியேன், கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் தெய்வம் தந்த பூவே, கருத்தம்மா படத்தில் போறாலே பொன்னுத்தாய், அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், காதலனில் டேக் இட் ஈஸி ஊர்வசி, எந்திரனில் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை, தென் மேற்கு பருவக் காற்று படத்தில் கள்ளிக் காட்டில் பிறந்த தாயே.

மதன் கார்க்கியின் மனைவி நந்தினி எலக்ட்ராக்னிக்ஸ் துறையில் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர், மதன் கார்க்கி பி.இ., கம்ப்யூட்டர் பட்டம் பெற்றவர். அவர் ஆஸ்திரேலியாவில் டாக்டர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்த போது நந்தினி டி,சி.எஸ்., நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு இருந்தார். நான்கு ஆண்டுகள் பழக்கத்திற்குப் பிறகு மதன் அவரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.
@ @@@@@
எனக்குப் பிடித்த வண்ணங்கள் கருப்பு மற்றும் வெள்ளை. அதிலும் குறிப்பாக வெள்ளை. இந்த இரு நிறங்களும் சுத்தமான தூய்மையான உணர்வை அளிக்கின்றன. வீட்டில் வரவேற்பு அறையிலும் வெள்ளை நிறத்தையே அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

உங்கள் வீட்டில் பிடித்த இடம்?
என் வீட்டில் எனக்கு, ஏன் எங்கள் அனைவருக்கும் பிடித்த இடம் வீட்டின் ரிஷப்சன் ஹால். இங்கு தான் அப்பா அவரை சந்திக்க வரும் அனைவரையும் வரவேற்று பேசுவது வழக்கம். இந்த அறையில் அப்பாவின் புத்தகங்களின் முதல் பிரதியின் அட்டை மாதிரியை ஃபிரேம் போட்டு மாட்டி வைத்திருப்போம். அது மிகவும் அழகாக இருக்கும். எங்கள் அனைவருக்கும் பிடித்த கான்சப்ட் அது. மேலும் அப்பா அவருக்கு வழங்கப்பட்ட மிகவும் அழகான, வித்தியாசமான பரிசுப்பொருட்களையும் இந்த அறையில் வைத்திருப்பார். பார்ப்பதற்கே மிகவும் அழகாக ரசிக்க வைக்கும்படி இருக்கும்.
@@@

உங்கள் மகன் பற்றி?

எங்களுது மகன் பெயர் ஹைகூ. அவர் மிகவும் கூர்மையான அறிவுடையவர். எதையும் எளிதாக புரிந்து கொள்கிறார். இசை என்றால் ஆர்வம் அதிகம். என்னையோ, அவரது தாயாரையோ பாடச் சொல்லி ரசித்து மகிழ்வார். ட்விட்டர் வலை பக்கத்தில் அவருக்கும் ஒரு புரோபைல் இருக்கிறது. அதில் அவர் தெரிவிக்கும் விஷயங்களை நானோ, அல்லது அவரது தாயாரோ பதிவு செய்வோம். அவருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.
 @ @@Advertisement
நடிகை கன்னிகாவின் ரசனையில்..!நடிகை கன்னிகாவின் ரசனையில்..! ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் பிரத்யேக பேட்டி! ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் ...


வாசகர் கருத்து (2)

சின்னசச்சின் - chennai,இந்தியா
11 மே, 2012 - 02:47 Report Abuse
 சின்னசச்சின் நைஸ் இன்டர்வியு சார்.
Rate this:
vetriselvan - channai,இந்தியா
10 மே, 2012 - 12:49 Report Abuse
 vetriselvan குட்.............
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in