ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலகத் திரையுலக வரலாற்றில் மிக விரைவில் 1 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படம் பெற்றுள்ளது. இரண்டாவது வார இறுதியில் மட்டும் இந்தப் படம் உலக அளவில் 275 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாம். மொத்தமாக உலக அளவில் 1.16 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
1.16 பில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 7787 கோடி ரூபாய் ஆகும். இந்தத் தொகை 2012ல் வெளிவந்த தி டார்க் நைட் ரைசஸ் வசூலான 1.08 பில்லியன் மற்றும் 2016ல் வெளிவந்த கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் வசூலான 1.15 பில்லியன் டாலர் வசூலை விட அதிகமானது.
படம் வெளியான 11 நாட்களில் 1.16 பில்லியன் வசூலித்திருப்பது என்பது சாதாரணத் தொகை அல்ல. மார்வெல் ஸ்டுடியோஸ் வரலாற்றில் மிகப் பெரும் வசூலை இந்தப் படம் புரிந்திருக்கிறது.
முதல் வார இறுதியில் 250 மில்லியன், இரண்டாவது வார இறுதியில் 275 மில்லியன் வசூலித்த இந்தப் படம் கடந்த புதன் கிழமையன்று 800 மில்லியன் டாலர் வசூலைக் கடந்தது. வார இறுதி என்பது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களை மட்டுமே குறிக்கும். மொத்தமாக 11 நாட்களில் 7787 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை அடுத்து இதன் அடுத்த பாகம்தான் வெளிவந்து முறியடிக்க வேண்டும்.